BSF ஒரு வங்காளதேச விவசாயியை கைது செய்ததைக் கண்டித்து, இரு இந்திய விவசாயிகளை கடத்திக் கொண்டு சென்றனர். பின்னர் இரு நாட்டு எல்லைப் பாதுகாப்புப் படைகளின் பேச்சுவார்த்தைக்குப் பிறகு அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
மேற்கு வங்கத்தின் நதியா மாவட்டத்தைச் சேர்ந்த இரு இந்திய விவசாயிகள், வங்காளதேச கிராம மக்களால் கடத்தப்பட்டு எல்லைக்கு அப்பால் அழைத்துச் செல்லப்பட்டனர். BSF ஒரு வங்காளதேச விவசாயியைத் தடுத்து வைத்திருப்பதை எதிர்த்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, BSF மற்றும் BGB ஆகிய இரு நாட்டு எல்லைப் பாதுகாப்புப் படைகளுக்கிடையே கொடி சந்திப்பு (Flag Meeting) நடைபெற்றது. இதன் விளைவாக, கடத்தப்பட்ட இந்திய விவசாயிகளும், தடுத்து வைக்கப்பட்டிருந்த வங்காளதேச விவசாயியும் அவரவர் நாட்டுப் படைகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.