கிராமப்புற அரசுப் பள்ளிகளின் நிலையை மேம்படுத்தும் நோக்கில் ஆகஸ்ட் 15 முதல் நாடு தழுவிய பிரச்சாரத்தை காக்ரோச் ஜனதா பார்ட்டி (CJP) தொடங்குகிறது. இதற்கான அறிவிப்பை அதன் நிறுவனர் அபிஜீத் தீப்கே வெளியிட்டுள்ளார்.

இந்தியாவின் கிராமப்புற கல்வி முறையில் நிலவும் அவநாமத்தை போக்க, ஆகஸ்ட் 15 ஆம் தேதியிலிருந்து நாடு தழுவிய பிரச்சாரத்தை மேற்கொள்ள காக்ரோச் ஜனதா பார்ட்டி (CJP) திட்டமிட்டுள்ளது. அரசுப் பள்ளிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதே இந்த இயக்கத்தின் முதன்மை நோக்கமாகும்.

தனது சொந்த ஊரான மகாராஷ்டிராவின் ஹிங்கோலியிலிருந்து இந்த முயற்சியைத் தொடங்குவதாக அபிஜீத் தீப்கே தெரிவித்துள்ளார். கிராம பஞ்சாயத்து தலைவர்களை (சர்பஞ்ச்) இதில் ஈடுபடுத்தும் 'சர்பஞ்ச் சேலஞ்ச்' என்ற திட்டத்தை அவர் அறிமுகப்படுத்தியுள்ளார். இதன் மூலம் பள்ளிகளை மேம்படுத்தும் தலைவர்களுக்கு சமூக வலைதளங்களில் அங்கீகாரம் வழங்கப்படும். மேலும், பெற்றோர்கள் பள்ளிகளின் வசதிகளை ஆய்வு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.