மத்திய கல்வி அமைச்சகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உயர் கல்விச் செயலாளராக நியமிக்கப்பட்ட 17 நாட்களிலேயே நரேஷ் பால் கங்கவர் மாற்றப்பட்டுள்ளார்.
மத்திய கல்வி அமைச்சகத்தில் நிர்வாக ரீதியான மாற்றங்கள் தொடர்கதையாக அமைந்துள்ளன. உயர் கல்விச் செயலாளராக நியமிக்கப்பட்ட நரேஷ் பால் கங்கவர், பதவியேற்ற 17 நாட்களுக்குப் பிறகு மாற்றப்பட்டுள்ளார்.
அவருக்குப் பதிலாக மூத்த அதிகாரியான தீப்தி கௌர் முகர்ஜி புதிய உயர் கல்விச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மாணவர்களின் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள சூழலில் இந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.