சர்ச்சைக்குரிய FCRA திருத்த மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக்குழுவிற்கு (JPC) அனுப்ப மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. காங்கிரஸ் மற்றும் டிஎம்சி இந்த மசோதாவை திரும்பப் பெற கோரிக்கை விடுத்துள்ளன.

சர்ச்சைக்குரிய FCRA (Foreign Contribution Regulation) திருத்த மசோதா 2026-ஐ நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வதற்கு முன்னதாக, அதனை கூட்டு நாடாளுமன்றக் குழுவிற்கு (JPC) அனுப்ப மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. பிரதமர் மோடியைச் சந்தித்த பிறகு, மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரென் ரிஜிஜு மக்களவை சபாநாயகரை சந்தித்துப் பேசினார். மசோதா குறித்த முட்டுக்கட்டையை நீக்க அவர் எதிர்க்கட்சித் தலைவர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

இருப்பினும், இந்த மசோதாவை முழுமையாக திரும்பப் பெற வேண்டும் என்று காங்கிரஸ் மற்றும் டிஎம்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்துகின்றன. டிஎம்சி பிரதிநிதிகள் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து மசோதாவை ரத்து செய்யக் கோரிக்கை விடுத்தனர். அரசு இந்த மசோதாவை JPC-க்கு அனுப்புமா அல்லது தற்போதைய வடிவத்திலேயே கொண்டு வருமா என்பது பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.