ஆவணி சிவராத்திரியை முன்னிட்டு டெல்லி-என்சிஆர் பகுதிகளில் காவடி யாத்திரீகர்களின் வருகை அதிகரித்துள்ளதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் மாற்று வழிகள் மற்றும் மெட்ரோ சேவைகளைப் பயன்படுத்துமாறு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
ஆவணி சிவராத்திரியை முன்னிட்டு டெல்லி, நொய்டா, காசியாபாத் மற்றும் ஃபரிதாபாத் ஆகிய பகுதிகளில் காவடி யாத்திரை உச்சத்தை எட்டியுள்ளது. இதன் காரணமாக முக்கிய சாலைகளில் போக்குவரத்து வேகம் கணிசமாகக் குறைந்துள்ளது. காலிந்தி குஞ்ச், நொய்டா-டெல்லி எல்லை, சரிதா விஹார் மற்றும் டிஎன்டி மேம்பாலம் ஆகிய வழிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது என்று போக்குவரத்து காவல்துறை எச்சரித்துள்ளது.
ஆசிரமம் சவுக், மதுரா சாலை மற்றும் பதர்பூர் எல்லை போன்ற முக்கியப் பாதைகளில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. எனவே, அலுவலகம், விமான நிலையம் அல்லது ரயில் நிலையங்களுக்குச் செல்வோர் கூடுதல் நேரத்துடன் திட்டமிட்டு புறப்படுமாறும், மெட்ரோ சேவைகளைப் பயன்படுத்துமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.