காஷ்மீரில் ஒரு பெண்ணின் முன்னாள் காதலர், அந்த பெண்ணின் கணவரை போதைப்பொருள் வழக்கில் சிக்க வைக்க திட்டமிட்டு போதைப்பொருட்களை அனுப்பி போலீசாருக்கு தகவல் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஷ்மீரின் காந்தர்பால் மாவட்டத்தில் உள்ள ஒரு கோழிப்பண்ணை உரிமையாளருக்கு, உத்தரபிரதேசத்தின் கான்பூர் நகரில் இருந்து ஒரு பார்சல் வந்தது. அதில் 4 கிலோ கோகோயின் மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் இருந்தன. இதனை அனுப்பியவர் அந்த உரிமையாளரின் மனைவியின் முன்னாள் காதலரான தாரிக் அகமது சோஃபி என போலீஸால் கண்டறியப்பட்டது.

பார்சலில் கோழி தீவன மாதிரிகள் இருப்பதாக நம்ப வைத்து அந்த நபரை ஏமாற்றிய சோஃபி, பின்னர் மறைமுகமாக போலீசாருக்கு தகவல் கொடுத்து அவரை கைது செய்ய முயற்சித்துள்ளார். விசாரணையில், திருமணத்திற்கு முன்பே அந்த நபருக்கு மிரட்டல் அழைப்புகள் வந்ததும் தெரியவந்துள்ளது. தற்போது சோஃபி கைது செய்யப்பட்டுள்ளார்.