பலூசிஸ்தான் சுதந்திர தின கொண்டாட்டங்களின் போது பாகிஸ்தான் ராணுவ தலைமையகத்தில் பயங்கர தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் ஒரு ராணுவ வீரரும் ஒரு தாக்குதலாளரும் கொல்லப்பட்டனர்.
பலூசிஸ்தான் சுதந்திர தினத்தை கொண்டாடும் நாளில், பாகிஸ்தான் ராணுவ தலைமையகத்தின் (GHQ) முக்கிய நுழைவாயிலுக்கு அருகில் பயங்கர துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இந்தத் தாக்குதலில் ஒரு பாகிஸ்தான் ராணுவ வீரரும், ஒரு தாக்குதலாளரும் உயிரிழந்தனர்.
இந்த எதிர்பாராத தாக்குதலால் ராவல்பிண்டி குடியிருப்பாளர்கள் கடும் பீதிக்குள்ளாகினர். பாகிஸ்தான் ராணுவத்தின் மிக முக்கியமான பாதுகாப்பு மையமான GHQ-வில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.