நோய்டாவில் திருமணமான 29 நாட்களில் 24 வயது பெண் 16-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். வரதட்சணை கொடுமை காரணமாகவே அவர் இந்த முடிவை எடுத்ததாக குடும்பத்தினர் புகார் தெரிவித்துள்ளனர்.
நோய்டாவின் டிவைன் மெடோஸ் குடியிருப்பில் வசித்து வந்த காமினி குமாரி, கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை 16-வது மாடியில் இருந்து குதித்து உயிரிழந்தார். ஜூலை 11 அன்று மந்தன் திமானை மணந்த காமினி, திருமணமான 29 நாட்களிலேயே இந்த முடிவை எடுத்துள்ளார்.
காமினியின் குடும்பத்தினர் அவர் வரதட்சணை கொடுமைக்கு ஆளானதாகக் குற்றம் சாட்டியுள்ளனர். ஆனால், காமினி மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், அதற்காக சிகிச்சை பெற்று வந்ததாகவும் அவரது கணவர் காவல்துறையிடம் தெரிவித்துள்ளார். இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.