லக்கிசராயில் உள்ள அசோகதாம் கோவிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் மற்றும் மின்சாரம் தாக்கியதில் 7 பேர் உயிரிழந்தனர். மேலும் 12-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
பீகாரின் லக்கிசராய் மாவட்டத்தில் உள்ள அசோகதாம் கோவிலில் சாவன் மாதத்தின் மூன்றாவது திங்கட்கிழமை அன்று பெரும் விபத்து ஏற்பட்டது. சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்ய ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடியிருந்தபோது, கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில் மின் கம்பத்திலிருந்து மின்சாரம் பாய்ந்ததில் 7 பெண்கள் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.