ஐடி கோளாறு காரணமாக அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானங்கள் நாடு முழுவதும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. தற்போது தொழில்நுட்ப சிக்கல்கள் சரிசெய்யப்பட்டு விமானங்கள் மீண்டும் இயக்கத் தொடங்கியுள்ளன.
ஐடி கோளாறு காரணமாக அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானங்கள் நாடு முழுவதும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாக ஃபெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் (FAA) தெரிவித்துள்ளது. தொழில்நுட்பப் பிரச்சனை காரணமாக சில அமைப்புகளின் இணைப்பு பாதிக்கப்பட்டது, இதனால் வானில் இல்லாத விமானங்கள் நிறுத்தப்பட்டன.
பிரச்சினையைத் தீர்க்கும் வரை தற்காலிகமாக விமான இயக்கத்தை நிறுத்தி வைத்ததாக ஏர்லைன்ஸ் நிறுவனம் கூறியுள்ளது. தற்போது அமைப்புகள் மீண்டும் செயல்பாட்டிற்கு வந்துள்ளதாலும், விமானங்கள் மீண்டும் இயக்கத் தொடங்கியுள்ளதாலும் பயணிகள் பயணத்தைத் தொடரலாம். இதனால் ஏற்பட்ட சிரமத்திற்கு நிறுவனம் மன்னிப்பு கேட்டுள்ளது.