பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிப்பில் குறைந்தது 11 சுரங்கத் தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காணாமல் போயுள்ளனர்.
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள சோரான்ஜ் பகுதியில் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிப்பில் குறைந்தது 11 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். மீத்தேன் வாயு அதிகரிப்பால் இந்த வெடிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று அரசு சுரங்க ஆய்வாளர் கானி பலூச் தெரிவித்துள்ளார்.
சுரங்க ஆய்வாளர் முகமது ஆதிப் கூறுகையில், வெடிப்பு ஏற்பட்ட நேரத்தில் அந்த பகுதியில் மொத்தம் 36 பேர் இருந்தனர், அதில் 28 பேர் இன்னும் காணாமல் போயுள்ளனர் என்று தெரிவித்தார். சுமார் 4,000 அடி ஆழத்தில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. உயிருடன் இருப்பவர்களைக் கண்டெடுப்பதற்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளதாகக் கூறப்படுகிறது.
பாகுசிஸ்தான் பகுதியில் நிலக்கரி சுரங்கத் தொழிலில் விபத்துகள் அடிக்கடி நிகழ்கின்றன. இங்குள்ள பல சுரங்கங்களில் முறையான காற்றோட்டம் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் இல்லை. சுரங்க உரிமையாளர்கள் பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றவில்லை என்று தொழிலாளர் குழுக்கள் குற்றம் சாட்டுகின்றன.