நெட்பிளிக்ஸ் தொடரான 'முசாஃபிர் காஃபே'-வில் விக்ரந்த் மஸியுடன் இணைந்து பணியாற்றிய அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளார் நடிகை வேதிகா பின்டோ. அனுபவமிக்க நடிகருடன் பணியாற்றுவது சவாலானது என்று அவர் கூறியுள்ளார்.
நெட்பிளிக்ஸில் வெளியாகி இணையத்தில் வரவேற்பைப் பெற்றுள்ள 'முசாஃபிர் காஃபே' தொடரில் வேதிகா பின்டோ, மஹிமா மக்வானா மற்றும் விக்ரந்த் மஸியின் நடிப்பு ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.
இந்தத் தொடரில் சுதா திரிபாதி கதாபாத்திரத்தை ஏற்றுக்கொண்டது குறித்து பேசிய வேதிகா, விக்ரந்த் மஸியுடன் பணியாற்றுவது தனக்கு ஒரு பெரிய ஊக்கமளிப்பதாகக் கூறினார். அதே சமயம், அவருடன் செட்டில் பணியாற்றுவது சற்று அச்சமூட்டுவதாக (intimidating) உணர்ந்ததாகவும் அவர் தெரிவித்தார். குறிப்பாக கெமிஸ்ட்ரி டெஸ்ட் சமயத்தில் தான் சற்று பதற்றமாக இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.