ஜம்மு காஷ்மீரின் மாநில அந்தஸ்து மற்றும் அரசியலமைப்பு உத்தரவாதங்களுக்காக டெல்லியின் ஜந்தர் மந்தர் பகுதியில் முதல்வர் ஓமர் அப்துல்லா தலைமையிலான போராட்டத்தைத் தொடர்ந்து, தற்போது ஃபாரூக் அப்துல்லா நாடாளுமன்றத்தில் மசோதாவை கொண்டு வர கோரிக்கை விடுத்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரின் மாநில அந்தஸ்து மீட்டெடுப்பதற்கான மசோதாவை நாடாளுமன்றத்தின் தற்போதைய மழைக்கால கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்தி நிறைவேற்ற வேண்டும் என்று நேஷனல் கான்ஃபரன்ஸ் தலைவர் டாக்டர் ஃபாரூக் அப்துல்லா வெள்ளிக்கிழமை வலியுறுத்தினார். மாநில அந்தஸ்து குறித்த மத்திய அரசின் தொடர்ச்சியான வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். இது வெறும் அரசியல் கோரிக்கை மட்டுமல்ல, இது ஒரு அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத் தேவை என்றும் அவர் கூறினார்.
மூன்று முறை ஜம்மு காஷ்மீர் முதலமைச்சராக பணியாற்றிய திரு. அப்துல்லா, மக்களின் ஜனநாயக உரிமைகளையும் கண்ணியத்தையும் மீட்டெடுக்க நாடாளுமன்றம் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார். சமீபத்தில் முதல்வர் ஓமர் அப்துல்லா தலைமையில் டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தைத் தொடர்ந்து இந்த முக்கிய கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.