2027 உத்தரபிரதேச சட்டமன்றத் தேர்தலில் பாஜகவை வீழ்த்த சமாஜவாதி கட்சி மற்றும் காங்கிரஸ் ஆகியவற்றுடன் கூட்டணி வைக்கலாம் என்று அசிதுதீன் ஓவைசி சிக்னல் கொடுத்துள்ளார். இதற்கு பாஜக கிண்டலாக பதிலடி கொடுத்துள்ளது.
AIMIM தலைவர் அசிதுதீன் ஓவைசி, உத்தரபிரதேச அரசியலில் ஒரு முக்கிய மாற்றத்தை ஏற்படுத்த முயல்கிறார். மொராதாபாத் மற்றும் சஹாரன்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டங்களில் பேசிய அவர், 2027 தேர்தலில் பாஜகவை முறியடிக்க அகிலேஷ் யாதவின் சமாஜவாதி கட்சி மற்றும் காங்கிரஸ் ஆகியவற்றுடன் இணைந்து செயல்பட வாய்ப்புள்ளதாகக் கோடிட்டுக் காட்டினார்.
ஓவைசியின் இந்தத் திட்டத்திற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த கூட்டணியை ஒரு 'நட்பு வேண்டுகோள்' (Friend Request) என்று கிண்டல் செய்துள்ள பாஜக, இது வெறும் அரசியல் சதுரங்கமே என்று விமர்சித்துள்ளது.