தினமும் 3,500 கியூசெக் காவிரி நீரைத் தமிழ்நாட்டிற்கு விடுவிக்க CWRC பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக கர்நாடகா மேல்முறையீடு செய்யத் திட்டமிட்டுள்ளது. தமிழக முதல்வர் விஜய் கர்நாடகா வரவிருப்பதை முதல்வர் டி.கே. சிவகுமார் உறுதிப்படுத்தியுள்ளார்.

தமிழகத்திற்கு தினமும் 3,500 கியூசெக் வேகத்தில் 15 நாட்களுக்கு காவிரி நீரை விடுவிக்க மத்திய காவிரி நீர் ஒழுங்குமுறை குழு (CWRC) பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக கர்நாடகா மாநிலம் மேல்முறையீடு செய்ய முடிவு செய்துள்ளது. இது குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார், இதற்கான சட்ட ரீதியான ஆயத்தங்கள் மற்றும் சட்ட வல்லுநர்களுடனான ஆலோசனைகள் நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார்.

கர்நாடகாவில் போதிய மழைப்பொழிவு இல்லாததால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். மேலும், தமிழக முதல்வர் ஜோசப் விஜய் கர்நாடகாக்கு வருகை தரவிருப்பதாகத் தெரிவித்துள்ளார். கர்நாடகாவின் காவிரிப் படுகையில் நிலவும் வறட்சி மற்றும் தற்போதைய நிலையை அவர் நேரில் காண, வான்வழி ஆய்வு மேற்கொள்ளுமாறு சிவகுமார் கேட்டுக்கொண்டுள்ளார்.