கோவில் பணிகளுக்கான அனைத்து டெண்டர்களும் இனி ஆன்லைன் மூலம் transparent ஆக நடைபெறும் என அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார். பெரிய முதலாளிகளின் ஆதிக்கத்தைக் குறைத்து அனைவருக்கும் வாய்ப்பளிக்க புதிய நடைமுறைகள் கொண்டு வரப்பட்டுள்ளன.
தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களுக்கான டெண்டர் முறையை டிஜிட்டல் மயமாக்க அரசு முடிவு செய்துள்ளது. அமைச்சர் ரமேஷ் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், இனி இந்து அறநிலையத்துறையின் அனைத்து டெண்டர்களும் ஆன்லைனில் நடக்கும் என்று கூறினார். இதன் மூலம் டெண்டர் விண்ணப்பங்கள் மற்றும் ஏலம் எடுக்கும் முறைகள் அனைத்தும் வெளிப்படைத்தன்மையுடன் இருக்கும்.
டெண்டர் எடுப்பவர்களுக்கு ஜிஎஸ்டி மற்றும் பான் கார்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும், கோவில் பார்க்கிங் கட்டண முறைகேடுகளைத் தவிர்க்க டிஜிட்டல் பில்லிங் முறையை அமல்படுத்தத் திட்டமிட்டுள்ளனர். பழனி நில மோசடி குறித்துப் பேசிய அவர், இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப் பரிந்துரைத்துள்ளதாகவும், குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தண்டனை நிச்சயம் என்றும் உறுதியளித்தார்.