ஜந்தர் மந்தர் போராட்டத்தில் பிரதமர் மோடியையும் அவரது மறைந்த தாயையும் அவதூறாகப் பேசிய மாணவர்களை மன்னிக்க விரும்புவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அவர்களைத் தண்டிக்காமல் நல்வழிப்படுத்த சமூகத்திற்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

டெல்லியின் ஜந்தர் மந்தரில் நடந்த சமீபத்திய போராட்டத்தின் போது தன்னைத் திட்டிய மாணவர்களை மன்னிக்க விரும்புவதாக பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை தனது இன்ஸ்டாகிராம் வீடியோவில் தெரிவித்துள்ளார். அந்த மாணவர்களை அவர் 'தவறான வழியில் சென்ற குழந்தைகள்' என்று குறிப்பிட்டுள்ளார்.

தனக்கும் தனது மறைந்த தாய்க்கும் எதிராகப் பயன்படுத்தப்பட்ட அவதூறான வார்த்தைகள் மிகுந்த மனவேதனையைத் தந்தாலும், இளைஞர்களுக்குத் தங்கள் தவறுகளிலிருந்து பாடம் கற்க ஒரு வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். தண்டனை கொடுப்பதை விட, அவர்களைச் சரியான பாதையில் வழிநடத்துவதே சிறந்தது என்று அவர் சமூகத்திற்கு வேண்டுகோள் விடுத்தார்.