காவிரி விவகாரம் குறித்து ஆலோசிக்க பெங்களூரு வரவிருந்த தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் பயணத்தை தள்ளிவைக்குமாறு கர்நாடக அரசு கேட்டுக்கொண்டதாக முதல்வர் டி.கே. சிவகுமார் தெரிவித்துள்ளார்.
காவிரி நீர் விவகாரம் குறித்து விவாதிக்க பெங்களூரு வரவிருந்த தமிழக முதல்வர் ஜோசப் விஜய், கர்நாடக அரசின் வேண்டுகோளுக்கு இணங்க தனது பயணத்தை தள்ளிவைக்க ஒப்புக்கொண்டுள்ளார் என்று கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பெங்களூருவில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய சிவகுமார், காவிரி தொடர்பான சூழல் மேம்பட்ட பிறகு ஆலோசனைகளை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறினார். மழையின் அளவு அதிகரித்துள்ளதால் நிலைமை முன்னேறி வருவதாக அவர் குறிப்பிட்டார். அரசியல் வேறுபாடுகள் இருந்தாலும், ஒருவருக்கொருவர் மதித்துக்கொண்டு இணைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.