நானா பட்டோலின் கால்களைக் கழுவும் வீடியோவைப் பார்த்து பாஜக கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளது. இந்தச் செயல் காங்கிரஸ் தலைவர்களின் 'கலாச்சாரத்தைப்' பிரதிபலிக்கிறது என்று பாஜக கூறியுள்ளது.

வெளியான வீடியோவில், பட்டோல் ஒரு சோபாவில் அமர்ந்திருக்க, இருவர் அவரது கால்களைக் கழுவி அவர் மீது மலர்களைத் தூவி வருகின்றனர்.

இது குறித்துப் பேசிய பட்டோல், அந்த இருவர் தனது குடும்ப உறுப்பினர்கள் என்று உறுதிபடத் தெரிவித்தார்.