பிரதமர் மோடியின் வீடியோவை நீக்கியது தொடர்பாக மெட்டா சிஇஓ மார்க் ஜுகர்பெர்க்கிற்கு நாடாளுமன்றக் குழு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. 3 நாட்களுக்குள் மன்னிப்பு கேட்கவில்லை என்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
பிரதமர் மோடியின் வீடியோவை நீக்கியது தொடர்பாக மெட்டா நிறுவனத்தின் பிரதிநிதிகள் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் செயலாளரைச் சந்தித்தனர். இருப்பினும், இது தொடர்பாக மார்க் ஜுகர்பெர்க்கிற்கு நாடாளுமன்றக் குழு ஒரு காலக்கெடுவை விதித்துள்ளது. 3 நாட்களுக்குள் மன்னிப்பு கேட்கவில்லை என்றால் சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
அல்காரிதம் காரணமாக இந்த தவறு நடந்துவிட்டது என்ற காரணம் செல்லாது என்று குழு தெரிவித்துள்ளது. மெட்டா நிறுவனம் இந்த விவகாரம் குறித்து முழுமையான விளக்கத்தை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக மெட்டா தரப்பில் 45 நிமிடங்கள் விளக்கம் அளிக்க முயன்றும், குழு அதை ஏற்கவில்லை.