இம்ரான் கான் சிறையில் மூன்று ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு பாகிஸ்தான் முழுவதும் அவரது ஆதரவாளர்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் சிறையில் மூன்று ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன. அவரது ஆதரவாளர்கள் பல்வேறு இடங்களில் திரண்டு தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்த போராட்டங்களின் போது பாகிஸ்தான் காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதில் நூற்றுக்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், இம்ரானுக்கு நீதி வழங்கப்படாவிட்டால் செப்டம்பர் 27 அன்று இஸ்லாமாபாத் நோக்கி பெரும் அணிவகுப்பு நடத்தப்படும் என்று பிடிஐ (PTI) கட்சி எச்சரித்துள்ளது.