முதல்வர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையிலான விவாகரத்து மனுவை சங்கீதா தற்போது திரும்பப் பெற்றுள்ளார். செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றம் இந்த வழக்கை முடித்து வைத்துள்ளது.

செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த விவாகரத்து மனுவை முதல்வர் விஜயின் மனைவி சங்கீதா அதிகாரப்பூர்வமாகத் திரும்பப் பெற்றுள்ளார். வீடியோ கான்பிரன்ஸ் மூலம் நீதிமன்றத்தில் ஆஜரான சங்கீதா, விவாகரத்து கோரும் மனுவைத் திரும்பப் பெறுவதாகத் தெரிவித்தார்.

நீதிபதி சுஜாதா வீடியோ கான்பிரன்ஸ் மூலம் ஆஜரான சங்கீதாவிடம் சுமார் 15 நிமிடங்கள் விசாரணை நடத்தினார். விசாரணையின் இறுதியில், சங்கீதா தனது முடிவை உறுதிப்படுத்தியதையடுத்து, விவாகரத்து கோரும் மனுவை முடித்து வைப்பதாக செங்கல்பட்டு நீதிமன்றம் அறிவித்தது.