முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் அவரது மனைவி மீது சிட்கோ நில முறைகேடு தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் சிபிசிடிடி இந்த வழக்கை மேற்கொண்டுள்ளது.
திமுக முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன், தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி சிட்கோ நிலத்தை முறைகேடாகத் தன் மனைவி பெயருக்கு மாற்றியதாகக் கூறப்படும் புகாரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை எஸ்.கே.கண்ணன் என்பவருக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தை முறைகேடான ஆவணங்கள் மூலம் மாற்றியதாகப் பார்த்திபன் என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இன்று (08-08-26) நடைபெற்ற சிறப்பு நீதிமன்ற விசாரணையில் மா.சுப்பிரமணியனும் அவரது மனைவியும் ஆஜராகினர். தங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை அவர்கள் மறுத்துள்ளனர். இந்த வழக்கின் சாட்சி விசாரணை ஆகஸ்ட் 31-ஆம் தேதி நடைபெறும் என நீதிபதி அறிவித்து வழக்கைத் தள்ளிவைத்துள்ளார்.