முன்னாள் பிரதமர் இம்ரான் கான் சிறையில் உயிரிழந்ததாக ஒரு பத்திரிகையாளர் கூறிய செய்தி பாகிஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பின்னர் அந்த செய்தி பொய்யானது என்று தெரியவந்தாலும், பிடிஐ (PTI) கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பாகிஸ்தானின் அதியால சிறையில் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் உயிரிழந்ததாக ஒரு பத்திரிகையாளர் கூறிய செய்தி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தச் செய்தியால் பாகிஸ்தான் முழுவதும் பதற்றமான சூழல் நிலவியது.

இருப்பினும், அந்தப் பத்திரிகையாளர் தனது கூற்றைத் திரும்பப் பெற்று, அது தவறானது என்று ஒப்புக்கொண்டார். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, இம்ரான் கானின் கட்சியான பிடிஐ (PTI) தலைவர்கள் மற்றும் ஆதரவாளர்கள் உச்ச நீதிமன்றத்திற்கு வெளியே திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இம்ரான் கானைச் சந்திக்க அனுமதி வழங்காவிட்டால் தெருக்களில் போராட்டம் நடத்தப்படும் என்று அவர்கள் எச்சரித்துள்ளனர்.