ஜென்-இசட் (Gen Z) இளைஞர்களை வாக்காளர்களாக மாற்ற ராஜஸ்தான் அரசு ஒரு தனித்துவமான முயற்சியை தொடங்கியுள்ளது. 18 வயது பூர்த்தியடையும் இளைஞர்களுக்கு முதல்வர் பஜன் லால் ஷர்மா தனிப்பட்ட முறையில் பிறந்தநாள் வாழ்த்து மற்றும் வாக்களிக்க அழைப்பு விடுத்து கடிதம் அனுப்புகிறார்.
இளைஞர்களைத் தேர்தல் விவகாரங்களில் ஈடுபடுத்தும் நோக்கில், ராஜஸ்தான் முதல்வர் பஜன் லால் ஷர்மா ஒரு புதிய முயற்சியைத் தொடங்கியுள்ளார். 18 வயது பூர்த்தியடையும் இளைஞர்களுக்குத் தனிப்பட்ட முறையில் பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவிக்கவும், அவர்களை வாக்காளர் பட்டியலில் பதிவு செய்யத் தூண்டவும் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
ஜூலை மாதம் முதல் இதுவரை ராஜஸ்தான் முழுவதும் சுமார் 80,000 கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன. இந்த கடிதங்கள் மூலம் இளைஞர்களின் சமூகப் பொறுப்பு மற்றும் ஜனநாயகத்தில் அவர்களின் முக்கியத்துவத்தை முதல்வர் வலியுறுத்துகிறார். ஒரு வளர்ந்த இந்தியா மற்றும் ராஜஸ்தானைக் கட்டியெழுப்ப இளைஞர்களின் பங்களிப்பு அவசியம் என்றும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.