சிறுபான்மையின மாணவர்கள் ரஃபேல் விமானத்தைப் பிரித்து மீண்டும் இணைக்கும் திறன் கொண்டவர்கள், ஆனால் படித்ததை மறந்துவிடுகிறார்கள் என்று தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார். இது அரசியல் மோதலுக்கு வழிவகுத்துள்ளது.

தெலுங்கானா முதல்வர் ஏ. ரேவந்த் ரெட்டி, சிறுபான்மையின மாணவர்கள் தொழில்நுட்ப ரீதியாக மிகவும் திறமையானவர்கள் என்று கூறினார். அவர்கள் ஒரு ரஃபேல் போர் விமானத்தை பிரித்து மீண்டும் இணைக்கக்கூடிய திறன் கொண்டவர்கள், ஆனால் புத்தகத்தில் படிப்பதை மறந்துவிடுகிறார்கள் என்று அவர் ஒரு மாநாட்டில் தெரிவித்தார்.

மேலும், இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் தனக்கு இரு கண்கள் போன்றவர்கள் என்றும், சிறுபான்மையினருக்கான நலத்திட்டங்களை தனது அரசு உறுதிப்பதாகக் கூறினார். ஆனால், ரேவந்த் ரெட்டியின் இந்த கருத்துக்கள் பாஜகவினால் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளன. காங்கிரஸ் சிறுபான்மையினரைத் திருப்திப்படுத்தும் அரசியலை செய்கிறது என்று பாஜக குற்றம் சாட்டியுள்ளது.