அரசியல் எதிரிகளாக இருந்த டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் மீண்டும் இணைந்துள்ளனர். குடியரசுக் கட்சியினருக்கு உதவ மஸ்க் 100 மில்லியன் டாலர்களை செலவிடத் திட்டமிட்டுள்ளார்.
அரசியல் கூட்டாளிகளாக இருந்து கடுமையான எதிரிகளாக மாறிய டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையிலான உறவு மீண்டும் சீரமைக்கப்பட்டுள்ளது. பல மாத கால ரகசிய முயற்சிகளுக்குப் பிறகு, மஸ்க் மீண்டும் டிரம்பின் நெருக்கமான வட்டத்திற்குள் வந்துள்ளார். வரவிருக்கும் இடைக்காலத் தேர்தலில் குடியரசுக் கட்சியினருக்கு உதவ குறைந்தது 100 மில்லியன் டாலர்களைச் செலவிட மஸ்க் திட்டமிட்டுள்ளார்.
வால் ஸ்டிரீட் ஜர்னலின் தகவல்படி, குடும்பத் தொடர்புகள் மற்றும் பொதுவான நண்பர்களின் முயற்சியால் இந்தச் சமரசம் ஏற்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் இருவரும் ஒருவருக்கொருவர் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்த போதிலும், ஸ்பேஸ்எக்ஸ் போன்ற நிறுவனங்களின் அரசாங்கத் தொடர்பு மற்றும் பாதுகாப்புத் தேவைகள் அவர்களை மீண்டும் இணைக்க வழிவகுத்துள்ளன.