தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ரயில் நிலையத்தில் தாம்பரம் - நாகர்கோயில் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயிலை இரு திசைகளிலும் நிறுத்த வேண்டும் என்று ரயில் பயணிகள் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தின் வரலாற்று சிறப்புமிக்க பாபநாசம் நகர ரயில் பயணிகள், தாம்பரம் - நாகர்கோயில் - தாம்பரம் அந்தியோதயா முன்பதிவு செய்யாத எக்ஸ்பிரஸ் ரயிலை பாபநாசம் ரயில் நிலையத்தில் இரு திசைகளிலும் நிறுத்த வேண்டும் என்று தென்னக ரயில்வேயிடம் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர். அந்தியோதயா எக்ஸ்பிரஸ் (20691 / 20692) ஒரு தினசரி ரயிலாகும்.
பாபநாசம் ஒரு முக்கியமான ஆன்மீக நகரமாகும். இங்குள்ள 108 சிவாலயங்கள் மற்றும் திருக்கருகாவூர் கர்பாரட்சாம்பிகா கோவில் போன்ற கோவில்களுக்கு பக்தர்கள் அதிக அளவில் வருகின்றனர். இரவு நேரங்களில் மற்ற ரயில்களில் இடம் கிடைப்பது கடினமாக இருப்பதால், அந்தியோதயா ரயிலை நிறுத்தினால் பொது பயணிகள் பெரிதும் பயனடைவார்கள் என்று பயணிகள் குழுவினர் தெரிவித்துள்ளனர்.