ஸ்பேஸ்எக்ஸின் ஸ்டார்ஷிப் 13வது சோதனைப் பயணம் வெற்றிகரமாக முடிவடைந்தது. டெக்சாஸில் இருந்து ஏவப்பட்ட விண்கலம் 20 ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களை நிலைநிறுத்திவிட்டு இந்தியப் பெருங்கடலில் விழுந்தது.
ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் 13வது ஒருங்கிணைந்த சோதனைப் பயணத்தை வெற்றிகரமாக முடித்துள்ளது. டெக்சாஸின் போகா சிகாவில் உள்ள ஸ்டார்பேஸில் இருந்து சூப்பர் ஹெவி பூஸ்டர் மூலம் ஏவப்பட்ட இந்த விண்கலம், ஆஸ்திரேலியாவிற்கு மேற்கே உள்ள இந்தியப் பெருங்கடலில் திட்டமிட்டபடி தரை இறங்கியது.
இந்தத் திட்டத்தின் போது, அடுத்த தலைமுறை ஸ்டார்லிங்க் பதிப்பு 3 செயற்கைக்கோள்கள் 20 எண்ணிக்கையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டன. மேலும், விண்வெளியில் ஒரு ராப்டர் என்ஜினை 14 வினாடிகள் வெற்றிகரமாக மீண்டும் இயக்கியது, இது எதிர்கால விண்வெளிப் பயணங்களுக்கு மிக முக்கியமான மைல்கல்லாகும்.