இந்திய வானியல் நிறுவனம் (IIA) ஆராய்ச்சியாளர்கள் சூரியனில் ஏற்படும் கொரோனா நிறை வெளியேற்றங்களை (CME) துல்லியமாக கணிக்க உதவும் ஒரு முப்பரிமாண (3D) கணினி உருவகப்படுத்துதல் மாதிரியை உருவாக்கியுள்ளனர். இது பூமியின் செயற்கைக்கோள்கள் மற்றும் மின்சார கட்டமைப்பைப் பாதுகாக்க உதவும்.

இந்திய வானியல் நிறுவனத்தின் (IIA) ஆராய்ச்சியாளர்கள் வெளிநாட்டு ஆராய்ச்சியாளர்களுடன் இணைந்து, கொரோனா நிறை வெளியேற்றங்கள் (CME) பூமியை வந்தடையும் முன் அதன் தாக்கம் மற்றும் வருகையை துல்லியமாக கணிக்க உதவும் ஒரு முப்பரிமாண (3D) கணினி உருவகப்படுத்துதல் மாதிரியை உருவாக்கியுள்ளனர். CME என்பது சூரியனிலிருந்து மில்லியன் கணக்கான கிமீ வேகத்தில் வெளியேறும் காந்த பிளாஸ்மா வெடிப்பாகும். இவை பூமியை நோக்கி வரும்போது செயற்கைக்கோள் அமைப்புகளை சேதப்படுத்தவும், மின் விநியோகத்தை பாதிக்கவும் மற்றும் உலகளாவிய தொடர்புகளைத் துண்டிக்கவும் வாய்ப்புள்ளது.

இந்த 3D மாதிரி, காந்த பிளக்ஸ் ரோப் (MFR) எவ்வாறு உயர்ந்து, சுற்றுப்புற காந்த புலத்தை நீட்டித்து, இறுதியில் வெடிக்கிறது என்பதைப் படிப்படியாகக் கண்காணிக்கிறது. இந்த ஆய்வின் முடிவுகள் நாசாவின் தரவுகளைக் கொண்டு ஹெல்சின்கி பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களுடன் இணைந்து சரிபார்க்கப்பட்டுள்ளன. இந்த ஆய்வு அஸ்ட்ரோபிசிகல் இதழில் வெளியிடப்பட்டுள்ளது.