நீடித்த ஆயுள் குறித்த ஆய்வுகளில் ஈடுபட்டு வரும் டெக் கோடீஸ்வரர் பிரையன் ஜான்சன், தனது காதலியின் மாதவிடாய் இரத்த மாதிரியை -80°C குளிர்சாதன பெட்டியில் சேமித்து வைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். பெண்களின் ஆரோக்கியம் குறித்த ஆராய்ச்சிக்காக இந்த முடிவை எடுத்ததாக அவர் கூறியுள்ளார்.
நீடித்த ஆயுள் (Longevity) குறித்த ஆராய்ச்சிகளுக்காகப் புகழ்பெற்ற அமெரிக்கத் தொழில்முனைவோர் பிரையன் ஜான்சன், தனது காதலி கேட் டோலோவின் மாதவிடாய் இரத்த மாதிரியை -80°C வெப்பநிலையில் உள்ள ஒரு குளிர்சாதன பெட்டியில் பாதுகாப்பாக வைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். இது சமூக ஊடகங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
மாதவிடாய் இரத்தம் என்பது வெறும் இரத்தம் மட்டுமல்ல, அதில் கருப்பை செல்கள், நோய் எதிர்ப்பு செல்கள் மற்றும் ஸ்டெம் செல்கள் போன்ற முக்கியமான கூறுகள் உள்ளன என்று ஜான்சன் கூறுகிறார். பெண்களின் கருப்பை ஆரோக்கியம் மற்றும் ஹார்மோன் அமைப்பில் மைக்ரோபிளாஸ்டிக் மற்றும் ரசாயனங்களின் தாக்கம் ஆகியவற்றை ஆய்வு செய்ய இது உதவும் என்று அவர் விவரித்துள்ளார்.