நாசா விண்வெளி வீரர்கள் அனில் மேனன் மற்றும் ஜெசிகா மேயர் சர்வதேச விண்வெளி நிலையத்தின் மின்சாரத் திறனை மேம்படுத்த வெற்றிகரமாக விண்வெளி நடைப்பயணத்தை (spacewalk) முடித்தனர்.

நாசா விண்வெளி வீரர்கள் அனில் மேனன் மற்றும் ஜெசிகா மேயர் சர்வதேச விண்வெளி நிலையத்தின் (ISS) மின் சேனலை மேம்படுத்துவதற்கான திருத்தக் கருவியை பொருத்துவதற்காக வெள்ளிக்கிழமை விண்வெளி நடைப்பயணத்தை முடித்தனர். இது விண்வெளி நிலையத்திற்கு ஆதரவாக மேற்கொள்ளப்பட்ட 281-வது விண்வெளி நடைப்பயணமாகும்.

சுமார் ஆறு மணி நேரம் 27 நிமிடங்கள் நீடித்த இந்த பயணத்தின் போது, அவர்கள் விண்வெளி நிலையத்தின் வெளிப்புறத்தில் கட்டமைப்பு மேம்பாடுகளை மேற்கொண்டனர். இந்த பணி, எதிர்காலத்தில் கூடுதல் ஆற்றலை வழங்கக்கூடிய 'IROSA' எனப்படும் சோலார் பேனல்களை நிறுவுவதற்கு வழிவகுக்கும் என்று நாசா தெரிவித்துள்ளது.