ரயில் பயணத்தின் போது ஒரு நபர் தனது இருக்கையையே சிறிய சமையலறையாக மாற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கையுறை மற்றும் ஹேர்நெட் அணிந்து மிகத் தூய்மையாக உணவு தயாரிக்கும் இவரின் விதம் அனைவரையும் ஆச்சரியப்பட வைக்கிறது.
ரயில் பயணத்தின் போது ஒரு நபர் தனது இருக்கையிலேயே சமையல் செய்யும் வீடியோ தற்போது இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. வீடியோவில் அந்த நபர் கையுறை மற்றும் ஹேர்நெட் அணிந்து சான்ட்விச் உள்ளிட்ட உணவுகளைத் தயார் செய்வதைக் காண முடிகிறது. அவருடன் பயணித்த ஒரு பெண்ணும் காய்கறிகளை நறுக்கி உணவைத் தயாரிக்க உதவியது குறிப்பிடத்தக்கது.
இந்த வீடியோவைப் பார்த்த சமூக வலைதள பயனர்கள் பலதரப்பட்ட கருத்துக்களைப் பகிர்ந்துள்ளனர். குடும்பத்தினர் மிகவும் சுகாதாரமான முறையில் உணவைத் தயாரித்ததை சிலர் பாராட்டியுள்ளனர். மற்றவர்கள், பொது இடங்களில் இத்தகைய செயல்களைச் செய்யும்போது மற்ற பயணிகளுக்கு இடையூறு ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர்.