2005 ஆம் ஆண்டு ஜோஷ்னா சின்னாப்பா செய்த சாதனையைத் தொடர்ந்து, உலக ஜூனியர் ஸ்க்வாஷ் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் முதல் இந்தியர் என்ற பெருமையை அனஹத் சிங் பெற்றுள்ளார்.
டெல்லியைச் சேர்ந்த டாப் சீட் அனஹத் சிங், உலக ஜூனியர் ஸ்க்வாஷ் சாம்பியன்ஷிப் தொடரில் ஒரு வரலாற்று மைல்கல்லை எட்டியுள்ளார். 2005 ஆம் ஆண்டு ஜோஷ்னா சின்னாப்பா செய்த சாதனையைத் தொடர்ந்து, இறுதிப் போட்டிக்கு முன்னேறும் முதல் இந்தியர் என்ற பெருமையை அனஹத் பெற்றுள்ளார்.
வெள்ளிக்கிழமை நடைபெற்ற அரையிறுதியில், எகிப்தின் பார்ப் சமேக்கை அனஹத் 11-3, 8-11, 11-4, 11-6 என்ற புள்ளி கணக்கில் தோற்கடித்தார். உலக தரவரிசையில் 20 வது இடத்தில் உள்ள அனஹத், இந்தியாவின் முதல் உலக ஜூனியர் ஸ்க்வாஷ் சாம்பியன் என்ற இலக்கை அடைய மிக அருகில் உள்ளார்.
இறுதிப் போட்டியில் அவர் எகிப்தின் இரண்டாவது சீட் ருக்காயா சலேமுடன் மோதுவார். கடந்த தொடரில் வெண்கலப் பதக்கம் வென்ற அனஹத், தனது முன்னேற்றத்தால் பயிற்சியாளர்கள் மற்றும் பெற்றோரை மகிழ்ச்சியடையச் செய்துள்ளார்.