பார்சிலோனாவின் கேம்ப் நௌ மைதானம் புனரமைக்கப்படும் போது ஏற்பட்ட விபத்தில் 54 வயது தொழிலி ஒருவர் உயிரிழந்தார். கிளப் நிர்வாகம் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளது.

தங்கள் கேம்ப் நௌ மைதானத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் புனரமைப்புப் பணியின் போது ஒரு கட்டுமானத் தொழிலி உயிரிழந்ததாக பார்சிலோனா கால்பந்து கிளப் தெரிவித்துள்ளது. சனிக்கிழமை வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், பணியிட விபத்தில் உயிரிழந்த தொழிலியின் மரணம் குறித்து கிளப் ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொண்டது.

தலையில் பலத்த அடிபட்டதால் 54 வயது தொழிலி உயிரிழந்ததாக கேட்டலான் போலீசார் தெரிவித்தனர். ஐரோப்பாவின் மிகப்பெரிய கால்பந்து மைதானமான கேம்ப் நௌ-வின் பெரும் மறுசீரமைப்புப் பணிகள் 2023 இல் தொடங்கின. பணிகள் நிறைவடைந்தால் மைதானத்தின் கொள்ளளவு 1,05,000 ஆக இருக்கும்.