2026 காமன்வெல்த் போட்டிகளின் போது ஆண்கள் குழு ஜிம்னாஸ்டிக்ஸ் இறுதிப் போட்டியில் இங்கிலாந்தின் 19 வயது ஜிம்னாஸ்ட கேப்ரியல் லங்டன் உயர்பாரிலிருந்து தவறி விழுந்து விபத்துக்குள்ளானார். அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
2026 கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டிகளின் போது ஆண்கள் குழு ஜிம்னாஸ்டிக்ஸ் இறுதிப் போட்டியில் ஒரு பயங்கரமான சம்பவம் நிகழ்ந்தது. இங்கிலாந்தின் 19 வயதான ஜிம்னாஸ்ட கேப்ரியல் லங்டன் ஹை பார் (high bar) பயிற்சியின் போது கையை தவறிவிட்டு நேரடியாகத் தலைகீழாக தரையில் விழுந்தார். இந்த விபத்து மிகவும் மோசமாக இருந்ததால், போட்டியின் போது மைதானமே அமைதியானது மற்றும் போட்டி சில நிமிடங்கள் நிறுத்தப்பட்டது.
மருத்துவக் குழுவினர் உடனடியாகச் செயல்பட்டு, லங்டனின் கழுத்து மற்றும் தலையைப் பாதுகாப்பான நிலையில் வைத்து, அவரை ஸ்ட்ரெட்சர் மூலம் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். இங்கிலாந்து அணி தங்கம் வெல்ல முயற்சி செய்தபோது இந்த விபத்து ஏற்பட்டது. இறுதியில் கனடா தங்கம் வென்றது, இங்கிலாந்து வெள்ளிப் பதக்கம் மற்றும் ஆஸ்திரேலியா வெண்கலப் பதக்கம் வென்றன.
தற்போது லங்டனின் நிலைமை குறித்து இங்கிலாந்து ஜிம்னாஸ்டிக்ஸ் அணி ஒரு அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டுள்ளது. மருத்துவப் பரிசோதனையில் அவருக்குப் பெரிய அளவில் காயம் ஏதும் இல்லை என்று தெரியவந்துள்ளது. அவர் முழு விழிப்புணர்வுடன் இருப்பதாகவும், தற்போது மருத்துவக் கண்காணிப்பில் அவர் பாதுகாப்பாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.