2026 இல் ஆர்சிபி மிகவும் மதிப்புமிக்க ஐபிஎல் அணியாக உருவெடுத்துள்ளது. ஐபிஎல்-இன் ஒட்டுமொத்த வணிக மதிப்பு முதன்முறையாக 20 பில்லியன் டாலரைத் தாண்டியுள்ளது.

இந்திய பிரீமியர் லீக் (IPL) வணிக மதிப்பு முதன்முறையாக 20 பில்லியன் அமெரிக்க டாலர் என்ற மைல்கல்லைத் தொட்டுள்ளது. இது கிரிக்கெட் சந்தையின் அபரிமிதமான வளர்ச்சியைப் பிரதிபலிக்கிறது.

பிராண்ட் மதிப்பின் அடிப்படையில், ராயல் சல்லஞ்சர்ஸ் பெங்கலூரு 312 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பைக் கொண்டு முதலிடத்தில் உள்ளது. சிஎஸ்கே அணி இந்தப் பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது.