2026 ஆம் ஆண்டு எஃப்ஐஎச் ஹாக்கி உலகக் கோப்பைக்கு முன்னதாக, இந்திய அணியின் பாரம்பரிய நீல நிற ஜெர்சிக்கு பதிலாக காவி நிற ஜெர்சி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த முடிவை முன்னாள் கேப்டன் வீரன் ரஸ்குன்ஹா கடுமையாக விமர்சித்துள்ளார்.
2026 ஆம் ஆண்டு எஃப்ஐஎச் ஹாக்கி உலகக் கோப்பை தொடங்குவதற்கு முன்னதாக, இந்திய ஹாக்கி அணியின் புதிய ஜெர்சி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பல தசாப்தங்களாக நீல நிற ஜெர்சியில் விளையாடி வந்த இந்திய அணிக்கு, தற்போது காவி (ஆரஞ்சு) நிற ஜெர்சியை ஹாக்கி இந்தியா அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த முடிவுக்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் வீரன் ரஸ்குன்ஹா தனது சமூக ஊடக பக்கத்தில் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் அடையாளம் எப்போதும் நீல நிற ஜெர்சிதான் என்று கூறியுள்ள ரஸ்குன்ஹா, இந்த நிற மாற்றத்திற்கான காரணம் என்ன என்று கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கிடையில், இந்த சர்ச்சைகளுக்கு மத்தியில் தலைமை பயிற்சியாளர் கிரெய்க் ஃபுல்டன் வழிகாட்டுதலின் கீழ் இந்திய அணி உலகக் கோப்பைக்கான தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளது. பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்தில் நடைபெறவுள்ள இந்த உலகக் கோப்பையில், 50 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சாம்பியன் பட்டத்தை வெல்ல இந்திய அணி இலக்கு வைத்துள்ளது.