புகழ்பெற்ற மலையேற்ற வீரர் நிர்மல் புர்ஜா பாகிஸ்தானின் பிராட் பீக்கில் ஏற்பட்ட பயங்கர பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்தார். விபத்திற்கு சற்று முன் எடுக்கப்பட்ட புகைப்படம் மற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
உலகின் துணிச்சலான மலையேற்ற வீரர்களில் ஒருவரான நிர்மல் புர்ஜாவின் குழு, ஜூலை 30, 2026 அன்று பாகிஸ்தானின் காரகோரம் வரம்பில் உள்ள பிராட் பீக்கில் ஒரு பயங்கர பனிச்சரிவில் சிக்கியது. பிராட் பீக் உலகின் 12வது உயரமான மலையாகும். விபத்திற்கு முன்னதாக பேஸ் கேம்பிலிருந்து எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் மற்றும் வீடியோவில் நிர்மல் புர்ஜாவும் அவரது குழுவினரும் மலையேறுவது காணப்படுகிறது.
பாகிஸ்தான் டூர் ஆபரேட்டரான 'காரகோரம் விஷன்' இந்த புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளது. பனிச்சரிவு ஏற்பட்டபோது 10 சர்வதேச மலையேற்ற வீரர்கள் மேலே சென்று கொண்டிருந்தனர். ஜிபிஎஸ் டிராக்கர்கள் மலையேற்ற வீரர்கள் பனியுடன் கீழே சரிந்ததைக் காட்டின. நிர்மல் புர்ஜாவின் நிறுவனம் 'எலிட் எக்ஸ்பெடிஷன்' அவரது மரணத்தை உறுதிப்படுத்தியுள்ளது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.