ஹர்திக் பாண்டியா சிஎஸ்கே அணியில் கேப்டன் பதவி மற்றும் அணி தேர்வு அதிகாரங்களை கோரியுள்ளதால் அணி நிர்வாகம் அதிருப்தியில் உள்ளது. இதற்கிடையில் டெல்லி கேபிடல்ஸும் ஹர்திக்கை குறிவைத்துள்ளது.

ஐபிஎல் 2026 சீசனுக்குப் பிறகு ஹர்திக் பாண்டியாவை வாங்குவதற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் அணியுடன் தீவிரமாகப் பேசி வருகிறது. ஆரம்பத்தில் சாதாரண வீரராகச் சேர சம்மதித்த ஹர்திக், தற்போது கேப்டன் பதவி மற்றும் அணித் தேர்வு ஆகியவற்றில் முழு அதிகாரம் வேண்டும் என நிபந்தனை விதித்துள்ளார்.

கடந்த சீசனில் ஹர்திக்கின் ஆட்டம் சுமாராக இருந்ததால், அவரது இந்த கூடுதல் அதிகாரக் கோரிக்கைகள் சிஎஸ்கே நிர்வாகத்திடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், ஹர்திக்கை அணியில் சேர்க்க தோனி ஆர்வம் காட்டி வருகிறார்.

இந்தச் சூழலில், டெல்லி கேபிடல்ஸ் அணியும் ஹர்திக்கை வாங்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதனால் சிஎஸ்கே மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. இக்கட்டான நிலையில், ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ஹர்திக் ஆகிய இருவரையும் நேரில் அழைத்து பேச தோனி திட்டமிட்டுள்ளார்.