டி20 கிரிக்கெட் உலகில் ஒரு புதிய புயலாக உருவெடுத்துள்ளார் இந்திய இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி. கிறிஸ் கெயலின் சாதனைகளையும் அவர் முறியடித்து வருகிறார்.

டி20 கிரிக்கெட் உலகின் 'யுனிவர்சல் பாஸ்' என்று அழைக்கப்படும் கிறிஸ் கெயலின் சாதனைகளை ஒரு இளம் வீரர் முறியடிப்பார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. இந்திய இளம் நட்சத்திரம் வைபவ் சூர்யவன்ஷி தனது அதிரடி ஆட்டத்தால் உலகையே வியக்க வைத்துள்ளார்.

வைபவ் தனது முதல் 40 டி20 இன்னிங்ஸ்களில் 1670 ரன்களைக் குவித்துள்ளார். இதில் 132 ஃபோர்கள் மற்றும் 168 சிக்ஸ்கள் அடங்கும். கிறிஸ் கெய்ல் தனது முதல் 40 இன்னிங்ஸ்களில் 1189 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். வைபவின் ஸ்ட்ரைக் ரேட் 216.32 ஆக உள்ளது, இது கெய்யின் 137.29-ஐ விட மிக அதிகம். மேலும் வைபவ் 4 சதம் மற்றும் 8 அரைசதங்களை அடித்துள்ளார்.