ஆஸ்திரேலியாவில் ஐபிஎல் போட்டிகளை நடத்துவதற்கான வாய்ப்புகளை கிரிக்கெட் ஆஸ்திரேலியா திறந்து வைத்துள்ளது. மேலும், பிபிஎல் தொடரின் முதல் போட்டி இந்தியாவில் நடைபெற உள்ளது.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான கிரிக்கெட் உறவு மேலும் வலுப்பட உள்ளது. கிரிக்கெட் ஆஸ்திரேலியா (CA), இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துடன் (BCCI) ஐபிஎல் குறித்து ஆலோசித்துள்ளது. இதில் ஆஸ்திரேலியாவில் ஐபிஎல் போட்டிகளை நடத்துவது குறித்த சாத்தியக்கூறுகள் விவாதிக்கப்பட்டுள்ளன. எதிர்காலத்தில் ஆஸ்திரேலியாவில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறுவதற்கான வாய்ப்பை அவர்கள் மறுக்கவில்லை.

இதற்கிடையில், பிக் பேஷ் லீக் (BBL) வரலாற்றில் ஒரு முக்கிய மாற்றம் நிகழ்வுள்ளது. 2026-27 சீசனின் முதல் போட்டியான மெல்போர்ன் ரெனேகேட்ஸ் மற்றும் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் இடையிலான போட்டி சென்னையில் நடைபெற உள்ளது. ஆஸ்திரேலியாவின் இந்த டி20 தொடர் முதன்முறையாக அந்நாட்டை விட்டு வெளியே நடத்தப்பட உள்ளது.