முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வோனின் மகன் ஆர்ச்சி வோன், சரே அணிக்கு எதிராக அபார ஆல்ரவுண்ட் ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 52 ரன்கள் எடுத்ததோடு 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.

சரே அணிக்கு எதிரான போட்டியில் ஆர்ச்சி வோன் ஒரு சிறப்பான ஆல்ரவுண்ட் ஆட்டத்தை நிகழ்த்தி சம்மர்செட்டின் பிரம்மாண்ட வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார். 20 வயதான ஆர்ச்சி, ஆறாவது இடத்தில் பேட்டிங் செய்ய வந்து வெறும் 36 பந்துகளில் 52 ரன்களைக் குவித்தார். இதில் மூன்று பவுண்டரிகளும் மூன்று சிக்ஸ்கர்களும் அடங்கும்.

பேட்டிங்கிற்குப் பிறகு, பந்துவீச்சிலும் ஆர்ச்சி தனது திறமையை நிரூபித்தார். அவர் 9 ஓவர்களில் 41 ரன்களைக் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஜாக் லீச்சின் உதவியுடன் சரே அணியின் மிடில் ஆர்டர் சரிந்து, அவர்கள் 180 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். இதன் மூலம் சம்மர்செட் 188 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.