பஃபலோ பில்ஸின் புதிய $2.2 பில்லியன் ஹைமார்க் மைதானத்தில் பல இடங்களில் அமர்ந்திருப்பவர்களுக்கு ஆட்டத்தைப் பார்ப்பதில் இடையூறுகள் ஏற்பட்டுள்ளதாகக் புகார்கள் எழுந்துள்ளன.
நியூயார்க் ஆளுநர் கேத்தி ஹோச்சுல், பஃபலோ பில்ஸ் அணியின் புதிய ஹைமார்க் மைதானத்தைத் திறந்து வைத்தார். $2.2 பில்லியன் செலவில் கட்டப்பட்ட இந்த மைதானத்தில், குளிர்காலத்திற்கு ஏற்றவாறு இன்ஃப்ராரெட் ஹீட்டர்கள் மற்றும் பனி உருக்கும் நவீன வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
இருப்பினும், சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பகிர்ந்த வீடியோக்களில், பல இடங்களில் கண்ணாடித் தடுப்புகள் மற்றும் படிக்கட்டு கைப்பிடிகளால் ஆட்டம் மறைக்கப்படுவது தெரியவந்துள்ளது. குறிப்பாக, அதிக விலை கொடுத்து வாங்கப்பட்ட சில இடங்களில் இருந்துகூட மைதானத்தின் மறுபக்கத்தை முழுமையாகப் பார்க்க முடியவில்லை என்று ரசிகர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.