லியோனல் மெஸ்ஸியும் நெய்மாரும் மூன்றாவது முறையாக ஒரே கிளப்பில் விளையாட வாய்ப்புள்ளது. ஜனவரி 2027-ல் இன்டர் மியாமி அணியில் இவர்கள் இணையக்கூடும் என பிரேசில் முன்னாள் வீரர் பெலிப் மெலோ தெரிவித்துள்ளார்.
பார்சிலோனா மற்றும் பிஎஸ்ஜி அணிகளில் ஆறு சீசன்களாக இணைந்து விளையாடிய மெஸ்ஸி மற்றும் நெய்மார் ஜோடி, ரசிகர்களுக்குப் பெரும் விருந்தளித்தது. பார்சிலோனாவில் இவர்கள் இணைந்து 299 கோல்களை அடித்ததுடன், சாம்பியன்ஸ் லீக் உட்பட எட்டு கோப்பைகளை வென்றனர்.
சான்டோஸ் கிளப்பிற்குடனான ஒப்பந்தம் முடிவடையும் நிலையில், நெய்மார் இன்டர் மியாமி அணிக்கு மாற வாய்ப்புள்ளதாக பெலிப் மெலோ தனது யூடியூப் சேனலில் கூறியுள்ளார். இருப்பினும், தனது ஒப்பந்த காலம் முடியும் வரை காத்திருந்து முடிவெடுப்பதாக நெய்மார் தெரிவித்துள்ளார்.