சிபிஎல் 2026 போட்டியில் ஜமைக்கா கிங்ஸ்மென்ஸிற்காக ஆண்ட்ரே ரஸ்ஸல் 9 சிக்ஸர்களுடன் 68 ரன்கள் எடுத்தார். இருப்பினும், அவரது அதிரடி ஆட்டமும் அணியின் தோல்வியைத் தடுக்கவில்லை.

சிபிஎல் 2026 தொடரில் ஜமைக்கா கிங்ஸ்மென்ஸிற்காக விளையாடிய ஆண்ட்ரே ரஸ்ஸல், பார்கடோஸ் டிரிடண்ட்ஸ் அணிக்கு எதிராக அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 7வது வரிசையில் களமிறங்கிய ரஸ்ஸல், 38 பந்துகளில் 178.95 ஸ்டிரைக் ரேட்டில் 68 ரன்களைக் குவித்தார். இந்த இன்னிங்ஸில் அவர் 9 சிக்ஸர்களை அடித்தார், ஆனால் ஒரு ஃபோர் கூட அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முதலில் பேட்டிங் செய்த பார்கடோஸ் டிரிடண்ட்ஸ் அணி, பிரெண்டன் கிங்கின் 73 ரன்கள் உதவியுடன் 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளில் 206 ரன்கள் எடுத்தது. இதனைத் தொடர்ந்து சவாலை எதிர்கொண்ட ஜமைக்கா கிங்ஸ்மென்ஸ் அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது ஜமைக்கா அணி. பார்கடோஸிற்காக டேனியல் சாம்ஸ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.