2026 நாகோயா ஆசியன் கேம்ஸ் கிரிக்கெட் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் தொடக்க நிலையிலேயே மோத வாய்ப்பில்லை. இந்த இரு அணிகளும் இறுதிப் போட்டி அல்லது வெண்கலப் போட்டியில் மட்டுமே சந்திக்க முடியும்.

2026 நாகோயா ஆசியன் கேம்ஸ் கிரிக்கெட் தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஆரம்பக் கட்டத்தில் மோதாது என்ற செய்தி விளையாட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. வழக்கமாக லீக் நிலையிலேயே இவ்விரு அணிகளும் மோதும் வகையில் அட்டவணை அமையும், ஆனால் இந்த முறை அப்படி இல்லை.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு அணிகளும் டாப் சீட் பெற்று நேரடியாக குவாட்டர் ஃபைனலில் நுழைந்துள்ளன. அட்டவணையின்படி, இந்தியா குவாட்டர் ஃபைனல்-2 மற்றும் பாகிஸ்தான் குவாட்டர் ஃபைனல்-1 இல் விளையாடும். இதனால் குவாட்டர் ஃபைனல் அல்லது செமிஃபைனலில் கூட இவ்விரு அணிகளும் சந்திக்க வாய்ப்பில்லை.

இந்த அணிகள் மோத வேண்டுமானால், அவை கண்டிப்பாக தங்கம் அல்லது வெண்கலம் வெல்வதற்கான போட்டிகளில் மட்டுமே நுழைய வேண்டும். அதாவது, இரண்டு அணிகளும் தங்களது செமிஃபைனல் போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே இறுதிப் போட்டியில் மோத முடியும்.