இந்திய அணியின் பயிற்சியாளர் கௌதம் கம்பீருக்கு எதிராக வரும் விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்துள்ளார் ஹர்பஜன் சிங். மேலும், கேப்டன் சுப்மன் கில் பற்றியும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீருக்கு எதிராகத் தொடரும் விமர்சனங்களுக்கு முன்னாள் ஸ்பின்னர் ஹர்பஜன் சிங் ஆதரவு தெரிவித்துள்ளார். கம்பீரின் பேச்சு சில நேரங்களில் கசப்பாகத் தோன்றினாலும், அவர் எப்போதும் உண்மையை மட்டுமே பேசுகிறார் என்று ஹர்பஜன் கூறியுள்ளார். அணியின் தோல்விக்கு எப்போதும் பயிற்சியாளரை மட்டுமே குறை சொல்வது சரியல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கௌதம் கம்பீரின் ஆளுமை மற்றும் அர்ப்பணிப்பு குறித்துப் பேசிய ஹர்பஜன், அவர் ஒரு நேர்மையான மனிதர் என்று புகழ்ந்துள்ளார். அதே நேரத்தில், இந்திய அணியின் புதிய கேப்டன் சுப்மன் கில் பற்றியும் அவர் பேசியுள்ளார். கில் தலைமையிலான தொடர்களில் சில பின்னடைவுகள் இருந்தாலும், ஒரு இளம் கேப்டன் நிலைபெற கால அவகாசம் தேவை என்றும், கில் ஒரு சிறந்த கேப்டராக உருவெடுப்பார் என்றும் ஹர்பஜன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.