சினசினாட்டோ மாஸ்டர்ஸ் 1000 தொடரில் வீனஸ் வில்லியம்ஸ் மற்றும் ஸ்டெபனோஸ் சிசிபாஸ் தங்களது ஆட்டத்தைத் தொடங்குகின்றனர். இந்தத் தொடரில் பல முன்னணி வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

சினசினாட்டோ மாஸ்டர்ஸ் 1000 தொடரில் இன்று கிரேக்க வீரர் ஸ்டெபனோஸ் சிசிபாஸ் பிரெஞ்சு வீரர் வலேன்டின் ராயரை எதிர்கொள்கிறார். சிசிபாஸ் தனது தரவரிசையைப் பாதுகாக்கவும், வேகமான தரைதளத்தில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டவும் இந்த ஆட்டத்தில் தீவிரமாக போராடுவார்.

பெண்கள் பிரிவில், நட்சத்திர வீராங்கனை வீனஸ் வில்லியம்ஸ் கொலம்பியாவின் எமிலியானா அராங்கோவை எதிர்கொள்கிறார். இந்த வெற்றியின் மூலம் அவர் தற்போதைய சாம்பியன் இகா ஸ்வியாடெக் உடன் மோதும் வாய்ப்பைப் பெறுவார். மேலும் கரோலினா பிளிஸ்கோவா மற்றும் கிரிிகோர் டிமிட்ரோவ் போன்ற பல முன்னணி வீரர்கள் இந்தத் தொடரில் பங்கேற்கின்றனர்.