கால்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது தொழில் வாழ்க்கையை முடித்துக் கொள்ளப் போகலாம் என்றுhint கொடுத்துள்ளார். அடுத்த ஆண்டு தனது கடைசி ஆண்டாக இருக்கலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
கால்பந்து உலகின் ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது ஓய்வு குறித்த செய்தியை வெளியிட்டுள்ளார். வோக் (Vogue) இதழுக்கு அளித்த நேர்காணலில், 41 வயதான அவர், அடுத்த ஆண்டு தனது கால்பந்து வாழ்க்கையின் இறுதி ஆண்டாக இருக்கலாம் என்று தெரிவித்துள்ளார். ஒரு சிறந்த பாரம்பரியத்தை விட்டுச் செல்ல அவர் விரும்புகிறார்.
அல்//நாசர் கிளப் உடனான அவரது ஒப்பந்தம் ஜூன் 2027 வரை நீடித்தாலும், அவர் தனது எதிர்காலத் திட்டங்களை ஏற்கனவே வகுத்துவிட்டதாகக் கூறியுள்ளார். கால்பந்துக்குப்பிறகு பயணம் செய்தல் மற்றும் பிற பொழுதுபோக்குகளில் ஈடுபட அவர் திட்டமிட்டுள்ளார்.
ஐந்து முறை பாலோன் டி'ஓர் வென்ற ரொனால்டோ, ஸ்போர்டிங் சிபி தொடங்கி மான்செஸ்டர் யுனைடெட், ரியல் மாட்ரிட் மற்றும் ஜூவென்டஸ் போன்ற கிளப்களில் விளையாடி உலகப்புகழ் பெற்றவர். போர்ச்சுகல் தேசிய அணியின் மிகச்சிறந்த வீரராக அவர் திகழ்கிறார்.